பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 319

“அறந்தரு திருவாலவாயில்

அமர்ந்தவர்க்குத் தன்பேரால் சிறந்த பெருந்திருவீதியும்

திருநாளும் கண்டருளிப் பொருப்பு நெடுஞ்சிலையால் முப் புரமெரித்த சொக்கர்க்குத் திருப்பவனி கண்டருளித்

திருவீதியில் சேவித்துத் தென்மதுரைத் திருவாலவாய்

பொன்மலை எனப் பொன் வேய்ந்து” ( என-என்று கண்டோர் வியந்து புகழுமாறு) என வரும் குடுமியான் மலைக் கல்வெட்டு, இவ்வேந்தர் பெருமானுடைய திருப்பணியார் வத்தைப் புலப்படுத்துகிறது. மேலும், சுந்தர மூர்த்தி களைச் சிவபெருமான், தோழனாகக் கொண்டது போல, இக்குலோத்துங்கனையும் திருவாரூர் இறைவன், “நம் தோழன்” எனச் சிறப்பித்தார் என்று திருவாரூர்க் கல்வெட்டொன்றால் அறிகின்றோம்.

சிவநெறிச் செம்மலாகிய இச்சோழ வேந்தன் கல்வெட்டுக்கள் சில திருவானைக் காத்திருக் கோயிலில் இருப்பது வியத்தகு செய்தியன்று.

இவனது 18-ம் ஆட்சியாண்டில் இராசராச தேவன் பொன்பரப்பினான வாணகோவரையனும், சீயன் உடையபிள்ளையான அளங்க நாடாள் வானும் தம்முள் வேறுபாடு நீங்கி ஒருவர்க்கொருவர் துணையாவதாக ஆணைக்காவுடைய அண்ணல்