பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 343

பின்னர்ச் சென்ற சோழர் பெரும்படையுடன் பாண்டிப்படையும் கொங்கு நாட்டுத் தலைவர் விடுத்த கொங்குப்படையும் வந்து சேர்ந்தன. முப்பெரும்படையும் கடல்பெயர்ந்து செல்வது போல நம்பிப் பல்லவராயன் தலைமையில் செல்லலுற்றன. ஈழப்படை வடக்கே காளப்பேர்

நோக்கி வந்துகொண்டிருந்தது.

தொண்டை நாட்டில் காஞ்சிமாநகரைச் குழி இருக்கும் பகுதிக்கு எயிற்கோட்டம் என்பது பெயர். கங்கை பாயும் நாடாகிய கெளடதேசத்திலிருந்து சிவாச்சாரியர் பலர் தென்னாட்டிற்கு வந்து மடங்கள் நிறுவி, மக்களுக்குச் சிவதன்மங்களை (சிவாகம நெறிகளை) அறிவுறுத்தி வந்தனர். தீக்கை முறைகளை முதற்கண் உண்டாக்கினவர்கள் அவர்களே. களசூரி வேந்தரும் மாளவ வேந்தரும் சோழ வேந்தரும் பிறரும் இம்மடங்கள் புரிந்த சிவப்பணியின் பொருட்டு ஊர்களும் விளை நிலங்களும் பொருளும் தந்து சிறப்பித்தனர். அவர்கள் நிறுவிய மடங்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நாடுகளில் ஆங்காங்கு இருந்து சமயத் தொண்டு புரிந்தன. மக்கட்குச் சமயக் கல்வி கற்பித்தலும், மருத்துவச்சாலை நிறுவி உடற் குண்டாகும் நோய்களைப் போக்குவதும், காணார் கேளார். அனாதைச் சிறுவர்கள் ஆகியோரைத் தொகுத்து ஆதரித்து அறிவு நல்குவதும் இம்மடங்கள் செய்த சிறந்த பணிகள். இதனால் நாடாளும் வேந்தர்