பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஒளவை சு. துரைசாமி

இவ்வாறு பொருள்களின் குணஞ் செயல் களைப் பகுத்துணர்த் துரைக்கும் பண்புடைப் புலமை சிறந்த பிள்ளையார், தத்துவ ஆராய்ச்சியில் தலைப்பட்டு மனத்தின் இயல்பும், அஃது இறைவன் வழிபாட்டில் அமையவேண்டிய அமைதியும் கண்டு, ஓரிடத்தில் அழகுறக் கூறுகின்றார். பிறப்பு இறப்புக் களால் உயிர்கள் எய்தும் துன்பத்தை இறைவனொரு வனே அறிவன்; பிறப்பற வேண்டின் இறைவனைப் பற்றியல்லது அது கைகூடாது; இறைவனைப் பற்றி நிற்றற்கு ஒன்றை வேண்டுதலும் வெறுத்தலும் ஆகிய இரு செயலும் உள்ளத்தின்கண் உண்டாதல் வேண்டும்; உள்ளமோ ஐம்புலன் வழிநின்று, தானல்லாத தொன்றைத் தானென நினையும் தன்மையதாகும். இது கொண்டு இறைவனை நினைப்பது எங்ஙனம் அமையும்? என்றோர் ஐயத்தை யெழுப்பி, எவ்வகையாலும், இறைவ, கருப்பம் கடத்தல் யான பெறவும் வேண்டும், கடத்தற்கு நினைத்தல் யான்பெறவும் வேண்டும், நினைத்தற்கு நெஞ்சு நெறி நிற்கவும் வேண்டும் (திருவிடை4) என்று இறைவனை வேண்டியமைகின்றார்.

இவ்வாறு உவமைவகையான் மட்டுமன்றிக் கற்பனைவகையிலும் இவரது புலமை தலை சிறந்து விளங்குகிறது. திருவிடைமருதூரில் இவர் இருந்து வருகையில் அதன் இயற்கையழகு முற்றும் நன்கு கண்டிருந்தார். அதனால் அவ்வூரையும் அதனைச் சூழும் காவிரியாற்றையும் அழகுறப்புனைந்து