பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 203

என்பதுபாசுரம். இதன்கண் வெடிகொளல் என்பது சிதர்த்தொழிதல்; “கடிகாவில் கால்துற்றெறிய வெடிபட்டு, வீற்று வீற்றோடும் இனமயில்போல், கேளிர் பிரிந்தார் அலறுபவே’ (களவழி 40 என்பத னால் அறிக. மெல்ல நீங்கிவரும் வினைகள் மீட்டும் முன்னைப் பயிற்சிவயத்தால் மீளத் தோன்றா வண்ணம் கெடுக்க வேண்டியிருத்தலால், “வினையை வீட்டவேண்டுவீர்” என விளித்து, “அடிகள்பாதம் அடைந்து வாழ் மினே’ என்று அருளுகின்றார். இக்கருத்தையே, திருமாகறற்பதிகத்திலும்,

“வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர், மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலுளான் எழிலதார் கையகரி கால் அரையின் மேலதுரி

தோலுடைய மேனியழகார் ஐயனடி சேர்பவரை யஞ்சியடையா

வினைகள் அகலுமிகவே.”

என்று அறிவுறுத்துகின்றார். மேல்வினைகளை வீட்டிய வழி, நின்ற வினையும் பற்றுக் கோடின்றிக் கெடும் என்றற்கு,

“நிழலார் சோலை நீல வண்டினம் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயர மில்லையே”