பக்கம்:நாலு பழங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நாலு பழங்கள்

தின்றான். இப்போது அவனுக்குப் பசி தீர்ந்தது. உற்சாகம் உண்டாயிற்று. பிறகு மெல்ல அந்த ஆலமரத்தில் ஏறினான். பொந்தில் ஏதாவது பாம்பு இருக்குமோ என்று ஜாக்கிரதையாகக் கவனித்தபடியே ஏறினான், சின்னப் பாம்புகள் ஒன்று இரண்டு இருந்தன. பெரிய பெரிய மிருகங்களையும், பாம்புகளையும் அடித்துக் கொன்றவனுக்கு அவை எம்மாத்திரம்? அவற்றையும் அடித்து எறிந்துவிட்டு ஆலமரத்தின் உச்சிக்கே ஏறினான்

ஆ! அங்கே அந்த நாகமாணிக்கம் பள பள வென்று ஒளி வீசிக்கொண்டிருந்தது. உச்சிக் கிளையில் இலைக் கொத்துக்கு நடுவில் சிறிய அக்கினிக் குஞ்சு போல அது மின்னிக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதை எடுத்துத் துடைத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டான்.

மெல்ல மரத்தை விட்டு இறங்கி, தான் வந்த காட்டையும் தாண்டி, அடிவாரத்துக்கு வந்தான். தன் வீட்டுக்குச் சென்று நாகமாணிக்கத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டினான். மிகவும் களைப்பாக இருந்ததனால் அன்று படுத்து நன்றாகத் தூங்கினான்.

விடிந்ததும் எழுந்து நீராடிவிட்டு நாகமாணிக்கத்தை எடுத்துக் கொண்டு அரசனிடம் போய் அதைக் காட்டினான். அழகாகவும், பலசாலியாகவும் இருந்த கண்ணனைக் கண்டான் அரசன். அவன் செய்த வீரச் செயலை மெச்சி அந்த நாக மாணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/36&oldid=1084380" இலிருந்து மீள்விக்கப்பட்டது