பக்கம்:நாலு பழங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயப் பெண்

35

பிறகு யாராவது வந்தால், கடகடவென்று இத் தனையையும் ஒரு முறை சொல்வார்.

"கல்லைப் போட்டுச் சமைப்பாள்; சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்து விடுவாள்; வேகாத இலையையும், வெட்டின காயையும், வெந்த கல்லையும் கலந்து வைப்பாள். வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள்; இரண்டு மாட்டின் மேல் படுத்துத் தூங்குவாள்” என்பதை வந்தவர்களிடம் சொல்லு வார். அவர்கள் வேறு ஏதாவது கேட்டால், அவள் சுபாவம் இது உனக்குப் பிடிக்குமானால் சொல்" என்று சொல்வார். வந்தவர்கள் போய் விடுவார்கள்.

இப்படிப் பல மாதங்கள் கழிந்தன. கடைசியில் அறிவும் அழகும் உடைய ஒரு கட்டிளங் காளை வந்தான். அவன் சுகுமாரன் என்ற பெயருடையவன். வித்தியாதரரிடத்தில் பேசிக்கொண்டிருந்தான். வித்தியாவதியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மெல்ல வெளியிட்டான். அவர் வழக்கப்படியே அவள் செய்யும் காரியங்களை அடுக்கினார். 'இவ்வளவு அறிவாளியான இவர் மகள் ஒன்றும் தெரியாதவளாகவோ, பொல்லாதவளாகவோ இருக்கமாட்டாள். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது' என்று எண்ணிய இளைஞன், "அவள் என்ன செய்தாலும் சரி; அதனால் நான் வருத்தப்படமாட்டேன். அவளைக் : கல்யாணம் செய்துகொள்ளச் சித்தமாக இருக்கிறேன்" என்றான்.

"யோசித்துச் சொல், அப்பா. பிறகு வருத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/41&oldid=1084878" இலிருந்து மீள்விக்கப்பட்டது