பக்கம்:நாலு பழங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நாலு பழங்கள்

டையும் புனைந்து சிங்காதனத்தில் வீற்றிருந்தான். எங்கும் ஒரே பிரகாசமாக இருந்தது.. அவனுக்கு முன்னே அமுதவல்லியைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவன் அவள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சிங்காதனத்தையும் அவன் அரசக் கோலத்தையும் அவள் கண்டாள். அவன் முகத்தை உற்றுக் கவனித்திருந்தால் அவனே தன் கணவன் என்று உணர்ந்திருப்பாள். ஆனால் கவனிக்கவில்லை. உத்தமி அல்லவா?

அவள் சற்றே புன்னகை பூத்தாள்; பிறகு அழுதாள்..

அரசகுமாரன், "இதென்ன? வெயிலும் மழையும் தொடர்ந்தாற்போல் வருகின்றனவே!" என்று தன் குரலை மாற்றிக்கொண்டு கேட்டான்.

அமுதவல்லி, "ஆம்; உம்முடைய ராஜ் வைபோகத்தைக் கண்டு, நீர் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவர் என்று எண்ணிச் சிறிதே நகைத்தேன். ஆனால், இப்பிறப்பில் மற்றொருவன் மனைவியை விரும்பும், பாவத்தில் அடுத்த பிறவியில் என்ன ஆவீரோ என்று அஞ்சி அழுதேன்" என்றாள்.

"கயிற்றை அவிழுங்கள்" என்று அரசகுமாரன் தன் இயற்கையான குரலில் சேவகர்களுக்கு உத்தரவிட்டான். அமுதவல்லி நிமிர்ந்து பார்த்தாள்.

என்ன பார்க்கிறாய்? உன்னைப் பல வகையிலும் சோதித்த உன் புருஷன் தான் நான்" என்றான் அரசு குமாரன்.

அமுதவல்லி ஆசையோடு அவன் முன் சென்று அவன் திருவடிகளை வணங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/58&oldid=1085005" இலிருந்து மீள்விக்கப்பட்டது