பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் 17

களாக இருக்கின்ருர்கள். இருப்பதும், சிரிப்பதும் நடப்பதும் எல்லாம் அவரவர் விருப்பப்படியே தான் அமைந்திருக்கும். ஆனால், அடுத்தவர்கள் வீட்டுக்குச் செல்லும் பொழுது அப்படி இருக்க முடிவ தில்லையே? அங்கு இருக்கும் பொழுது சிறிது அச்சமும் கொஞ்சம் அடக்கமும் கூடவே வந்து விடுகிறதல்லவா? அவ்வாறு பண்புடன் பழகுவ தைத் தான் பண்பாடு என்கிருேம்.

அத்தகைய பண்பாடு விளையாட்டுத் துறையில் நிலவ வேண்டும் என்று பலர் நினைப்பதேயில்லை. தான் கண்டதே காட்சி கொண்டதே கோலம், என்று, அகங்காரத்துடனே, தன்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று மனப்பால் குடித்த வண்ணம் சிலர் நடந்து கொள்கின்ருர்கள். பிறகு அசம்பாவிதமும், அர்த்தமற்ற வேறு செயல்களும் நடக்காமல் போகுமா என்ன?

பறவை மனிதர்கள்

மரத்தின் மேல் வந்து அமர்ந்து கொண்டு உண்டு உறங்கி, ஒய்வு எடுத்துக் கொள்கின்ற பறவைகள், தாங்கள் தான் மரத்தையே தாங்கிக் கொண்டிருக் கிருேம் என்று கூறினுல் நாம் என்ன நினைப்போம்? அந்த நிலையில் தான் தற்போது விளையாட்டுலகில் சிலர் நடைபோட்டுக் கொண்டி ருக்கிருர்கள்.

விளையாட்டுக்கள் மூலமாகத் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டிருப்பவர்கள், தங்களால்தான் விளையாட்டு வாழ்கிறது வளர்கிறது என்று வாய்ச்