பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4 o விளையாட்டுச் சிந்தனை கள்

பிரச்சினைகளை மிக எளிதாகத் தீர்த்துக் கொள்வதில் ந ல் ல சாமர்த்தியம் உள்ளவராக விளங்கு கின்ருர்கள்.

எளிமை, அடக்கம், பணிவு.

எளிமை, அடிக்கம், பணிவு என்னும் மூன்று பண்புகளும் இந்திய நாட்டு கலாச்சாரத்தின் மூலங் களாகும். எளிமையான வாழ்வு, உயர்ந்த லட்சியம், இதுவே இந்தியப் பண்பாட்டின் எழில் விளக்க மாகும். இந்திய நாட்டு விளையாட்டுக்களான கோகோவும் சடுகுடுவும் இதனையே பிரதிபலித்து. பிரபலப்படுத்திக் காட்டி, பெருமைப்படுத்தி வருகின்றன.

கலையும் கவலையும்

விளையாடிக் களிக்கின்ற நெஞ்சத்தில் தான் கலையுணர்வு நிறைந்திருக்கும். கவலையுணர்வு மறைந் திருக்கும். வாழும் காலம் எல்லாம் சுவையுணர்வே மிகுந்திருக்கும்.

இது முன்னேர் கண்டு சொன்ன உண்மை மட்டுமல்ல. இந்நாளில் ஈடுபட்டோர் அனைவரும் கண் கூடிாகக் கண்டு கொண்டு அனுபவிக்கும் உண்மையாகும்.

வசந்தமும் இலையுதிர் காலமும்

வாழ்வில் ஒரு முறையே வந்து போகிறது இளமை, இளமைதான் வாழ்வின் வசந்த காலம்.