பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 = விளை 蚤 ட்டுச் சிந் 3. னைகள்

காலம் கனியும். அந்தக் காட்சிக்காகக் காத்திரும் கிருேம்.

எப்படிச் செய்ய வேண்டும்?

உடற் பயிற்சியை செய்யும் பொழுது, யாருகி காகவோ செய்கிருேம் என்ற அடிமை மனப் பான்மையுடன் செய்யக் கூடாது.

'நமது உடலுக்காகவும், நலத்திற்காகவும் தான் செய்கிருேம். இது நம் கடமை, நம் உடலுக்கு நாம் செய்யும் தொண்டு' என்ற திருப்தி யுணர்வுடன், திடமான மனமுடன், உற்சாகத் துடன் செய்ய வேண்டும்.

பயிற்சிசெய்வது போன்ற பாவனையே இருக்கக் கூt.Tது. உண்மையும் உறுதியுமே உடலே முன்னேற்றும்.

உடலும உணாவும

விளையாட்டு வீரர்கள் எல்லாம், உடலால் மட்டும் சில நேரம் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு ஆடி விட்டு ஒதுங்கிப் போய் விடாமல், உள்ளத்தாலும் உணர்வாலும் விளையாட்டுக்களி னுாடே நிதமும் உலவ வேண்டும். அப்பொழுது தான் சீரிய திறமையும், சிறந்த ஆற்றலும்பெருகும். எதிர்பார்த்த பயனும் நிறையும்.