பக்கம்:நாலு பழங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நாலு பழங்கள்

இனி நான்காவது சோதனை ஒன்றுதான் பாக்கியிருந்தது. எல்லோருடைய ஆவலும் உச்சக் கட்டத்தை அடைந்தது.

"கொட்டையை உமிழ வேண்டிய அவசியம் இல்லாமல் தின்னும் பழம் எது?" என்று அரசகுமாரி கேட்டாள்.

"இதோ இது தான்" என்று அரசகுமாரன் ஒரு முந்திரிப் பழத்தை எடுத்து வைத்தான். அதில் பழத்துக்கு முன்னாலே கொட்டை ஒட்டிக்கொண்டு இருந்தது. இந்தப் பழத்தைத் தனியே எடுத்துத் தின்று விடலாமே! விதைக்கு ஒன்றும் நேராதே!" என்று அரசகுமாரன் சொல்லிச் சிரித்தான்.

நான்கு சோதனைகளிலும் வென்ற அரச குமாரனிடம் அரசன் எழுந்து சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டுவந்து தன் அருகே உள்ள ஆசனத்தில் அமர்த்தினான். அங்கேயே அரசகுமாரி அவன் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டாள்.

அதன் பிறகு ஒரு நல்ல நாளில் இருவருக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/12&oldid=1084196" இலிருந்து மீள்விக்கப்பட்டது