பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

#6) திருக்குறள் விளக்கு

குரல் ஆ: ஆம்; மேலே கதையைச் சொல்லுங்கள்.

குரல் அ : அந்தப் பெண் வீட்டை விட்டுப் போய் விட்டாள். மறுநாள் வீட்டில் அவளைக் காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கலங்குகிறார்கள். தோழி மெல்ல உண்மையைக் குறிப்பாக வெளியிடுகிறாள். வீட்டில் உள்ளவர்கள் கோபத்தால் குதிக்கிறார்கள், பெற்ற தாய் புலம்புகிறாள். அப்போது அந்த இளம் பெண்ணை வளர்த்த செவிலித்தாய், தான் போய் அவளைத் தேடிக் கண்டுபிடித்து வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுவிடுகிறாள்.

குரல் ஆ: அவளுக்கு அவர்கள் போன இடம் தெரியுமா?

குரல் அ : எப்படியாவது கண்டுபிடித்து விடலாம் என்ற தைரியந்தான். போகிறாள். வழியெங்கும் பொட்டல். மரமோ செடியோ இல்லாத பாலை நிலம். நெடுந்துாரத்தில் ஆணும் பெண்ணுமாக இருவர் வருகிறார்கள். செவிலிக்கு அவர்கள் தன் பெண் ணும் அவள் காதலனுமாக இருக்கக்கூடாதா என்ற ஆசை கையைக் கவித்துப் பார்க்கிறாள். அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள். பாவம் ! அவர்கள் வேறு யாரோ? ஏமாந்து போகிறாள், அவள். பேசத் தொடங்குகிறாள். (மாற்றம்.)


செவிலி: என்ன, இப்படி நம்மை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாளே என்று நினைக்கிறீர்களா? இதே அச்சு, இதே உயரம், இதே மாதிரி புடைவை வேட்டி