பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அறம் செய்து வந்தார். வேறு பலரோ நாளுக்கு நாள் தங்களுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்தச் செல்வர்கள் வாழ்வதனால் அந்த ஊருக்குப் புகழ் உண்டாகவில்லை. சின்னக் குடித்தனக்காரராகிய வேளாளர் ஒருவர் இருந்ததனால் வேறு ஊர்களிலிருந்து அவரை நாடி ஏழைகள் வருவார்கள்; புலவர்களும் வருவார்கள். அந்தப் புலவர்கள் தாங்கள் போகும் இடங்களில் எல்லாம் இந்த வேளாளருடைய புகழைப் பரப்பிக் கொண்டே போவார்கள். இதனால் அந்த ஊரினுடைய புகழ் எங்கும் பரவியது.

அந்தப் பேருபகாரியான வேளாளருக்குத் தமிழ் மொழியில் ஆர்வம் அதிகமாக இருந்தது. புலவர்களிடம் பாடல்களைக் கேட்டு அவர் இன்பம் அடைவார். தமிழ் மொழியினிடம் அன்பும், தரும் சிந்தனையும் ஒன்றாகச் சேந்த அவரிடம் யாருக்குத் தான் அன்பு பிறக்காது?

ஔவையாருடைய காதில் அந்த நல்லவருடையை புகழ் விழுந்தது. நல்ல மனிதர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பார்த்துப் பாராட்டுவது அந்தப் பெருமாட்டிக்கு இயல்பு அந்த உபகாரியான வேளாளரைப் பார்க்க விரும்பி ஒரு நாள் அவருடைய ஊருக்குப்போனார். ஊருக்குள்ளே நடந்து போனபோத பல பெரிய மாளிகைகளை ஔவையார் கண்டார் இந்த மாளிகைகளில் ஒன்றில் தானே அந்தப் பெரியவர்