பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

பதைப் பின் இரண்டு அடிகளில் வைத்துப் பாடினார்.

“சோழன் ஏன் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை தெரியுமா? புறங்காட்டாத இயல்பு காரணம் அன்று. சோழனோடு போர் செய்யும் ஆற்றல் பாண்டியனுக்குத்தான் உண்டு. அவனுடன் பாண்டியன் போர் செய்தால் நிச்சயம் சோழன் புறமுதுகிட்டு ஓடுவான். ஆனால் அவன் புறங்கொடுப்பதைக் கண்டவுடன் பாண்டியன் அவனை ஒன்றும் செய்ய மாட்டான். அவன் முதுகின்மேல் வேலை எறிய மாட்டான். அவ்வளவு உதார குணமும் பெருவீரமும் உடையவன் பாண்டிய மன்னன். தன் முதுகில் பாண்டியன் வேலை எறிய மாட்டான் என்ற உறுதி இருக்கும் பொழுது சோழன் அஞ்ச வேண்டிய அவசியமே யில்லை. அதனால்தான் சோழ மன்னன் தன் முதுகுக்குக் கவசம் அணிவதில்லை”

இப்படியெல்லாம் பொருள் கூறும்படியா அந்தப் பாடல் அமைந்தது. பாவம்! சோழ மண்டலப் புலவர் வாயடைத்துப் போனார். எது சோழனது வீரத்தை வெளிப்படுத்துமென்று நினைத்தாரோ, அதையே வைத்து அவனுடைய இழிவையும் பாண்டிய மன்னனுடைய உயர்வையும் காட்டும்படி மதுரைப் புலவர் பாடிவிட்டார்.