பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அவனுக்கு இந்தச் சங்கடமான நிலையினின்றும் தப்புவதற்கு வழி ஒன்றும் தெரியவில்லை.

குமரேசன், தற்சமயம் சிறந்த வியாபாரியாக இருந்து பணம் சேமித்து வந்தான். நாகப்பனுடைய வருந்தத் தக்க நிலைமையைச் சிலர் குமரேசனிடம் கூறினர் தன்னுடைய வறிய நிலையில் தனக்கு உபகாரம் செய்து கை தூக்கிவிட்ட நாகப்பனைக் குமரேசன் என்றும் மறக்கவில்லை.

சத்திய மங்கலத்தில் நாகப்பன் பசியும், பட்டினியுமாக இருப்பதைக் கேள்வியுற்று, அவனை அங்கிருந்து உடனே தன் வீட்டிற்கு அழைத்து வந்து நல்விருந்து படைத்தான்.

“நீங்கள் செய்த பேருபகாரத்தால் நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். உங்களுக்கு உபகாரம் செய்வதைவிட வேறு என்ன தருமம் இருக்கிறது? அதுவே எனக்கு மிக்க புண்ணியமான காரியம்” என்று சொல்லி ஆடைகளையும் பணத்தையும் குமரேசன் நாகப்பனுக்கு வழங்கினான். கண்ணீர் மல்க அவற்றை வாங்கிக் கொண்ட நாகப்பன், “கடவுள் உன்னைக் காப்பாற்றுவாராக!” என்று சொல்லி அவனை வாழ்த்தி விட்டுப் போனான்.

“தருமம் தலை காக்கும்” என்பதை நாகப்பன் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டான்.