பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சங்கீதக் கச்சேரிகளில் உனக்குப் பணம் கிடைப்பதனால் குடும்பம் நடத்துவதில் ஒரு சங்கடமும் இராது” என்றார். அதைக் கேட்ட கோபாலன், “இந்தப் பஞ்சையாகிய எனக்கு யார் பெண் கொடுப்பார்கள்?” என்றான். அந்தப் பெரியவர், “நீ பழைய கோபாலன் அல்லவே. ஒரு பெரிய சங்கீத வித்துவான் அல்லவா? உனக்கு யாரும் குதி போட்டுக் கொண்டு பெண்ணைத் தருவார்கள்” என்றார். “உங்களுடைய வாக்கு பலிக்கட்டும். கடவுள் சித்தம் எப்படியோ அப்படியே நடக்கும்” என்று கோபாலன் சொன்னான்.

கோபாலனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொன்ன அந்தப் பெரியவரே ஒரு குடும்பத்திலுள்ள அழகான கன்னிகையைப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானம் செய்தார். பெண் அழகாக இருந்தாள். கோபாலன் அந்தப் பெண்ணை வந்து பார்த்தான். அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அந்தப் பெண்ணுக்கும் அவனைப் பார்த்துத் திருப்தியாக இருந்தது.

பெரியவர்கள் நிச்சயித்தபடி ஒரு நல்ல நாளில் அந்தப் பெரியவரே கோபாலனுக்குத் தந்தையைப் போல இருந்து திருமணத்தை நிறைவேற்றினார். அதோடு அவன் குடும்பம் நடுத்துவதற்கு ஒரு நல்ல வீட்டைப் பார்த்து ஏற்பாடு செய்து கொடுத்-