பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 திருக்குறள் விளக்கு

வள்ளுவர் : ஒன்றும் தெரியவில்லையா? நான் சொல் லட்டுமா ? - .

ஒரு குரல் : (மெல்ல) சொல்லப் போகிறார் போலிருக்கிறதே!

வள்ளுவர் : இன்மையின் இன்னாதது யாது-எனின்

இரண்டாவது குரல் : (மெல்ல நல்ல வேளை புலவர் பெருமானே நம் தவிப்பை அறிந்து நம் உதவிக்கு வருகிறார். அவருக்குத்தான் தக்கபடி உவமை சொல்லத் தெரியும். பேசாதீர்கள். அவர் சொல் வதைக் கேட்கலாம்.

வள்ளுவர் : இன்மையின் இன்னாதது யாது-எனின்?......

முதற் குரல் : (மெல்ல) என்ன இது? இன்னும் சொல் லாமல் நம்மைத் தவிக்க விடுகிறாரே! இவர் எதைச் சொல்லப் போகிறார் ?

வள்ளுவர் : இன்மையின் இன்னதது யாது ?-எளின் இன்மையின்- .

இரண்டாவது குரல் : (மெல்ல) ஆ! இதோ உவமை வரப்போகிறது. வள்ளுவர் உவமைக்குத் தனிச் சிறப்பு உண்டல்லவா ? .

வள்ளுவர் : இன்மையின் இன்னாதது யாது ?-எனின் இன்மையின்- -

முதற் குரல் : (மெல்ல) பெருமூச்சு விடாதீர்கள். இதோ திருவள்ளுவர் திருவாக்கிலிருந்து உவமை நழுவி விழப்போகிறது. கவனியுங்கள். . - .

வள்ளுவர் : இன்மையின் இன்னாதது யாது?-எனின்

இன்மையின் இன்மையே இன்னாதது.*

1. குறள், 1041. ---------- ~ -------