பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 9

அதிலுள்ள பாடல்களுக்குக் கிடையாது. இது அதன் சொற்செறிவைக் காட்டும்.' -

குரல் அ: வடமொழியில் பேராசிரியராகிய மேலை நாட்டுப் பேரறிஞர் எம். வின்டர் நீட்ஸ் என்பவர் திருக்குறளின் வியாபகத்தைப் பாராட்டுகிறார். அதற்குக் காரணம் இன்னதென்றும் சொல்கிறார், அவரைக் கேட்கலாம். . .

வேறு குரல்: அவர் இனம், சாதி, வகுப்பு என்னும் வேற்றுமைகளைக் கடந்து நிற்கிறவர். அவர் உபதேசிப்பவை மனித இனத்துக்குரிய பொதுவான ஒழுக்கமும் பொதுவான அறிவுமேயாம். அந்த நூல் எங்கே பிறந்ததோ அந்த நாட்டினர் அதைப் படித்துப் பயின்று மிகச் சிறப்பாக மதிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமே இல்லை; அந்த நூலைப் புற உலகம் தெரிந்துகொண்டதுமுதல் மேலைநாட்டில் அதற்குப் பல அன்பர்கள் உண்டாகிவிட்டார்கள்."

குரல் ஆ: நம் நாட்டில் சமீபத்தில் வாழ்ந்த பேரறிஞர் களில் யாரேனும் இந்தக் கருத்தைச் சொல்லியிருக் கிறார்களோ? -

குரல் அ: எவ்வளவோ பேர் சொல்லியிருக்கிறார்கள். 'திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்று பாரதியார் கூறினாரல்லவா? அதனால் மேல்நாட்டாருடைய

1. Complete in itself, the sole work of its author (The Kural) has come down the stream of ages absolutely uninjured, hardly a single various reading of any importance being found. --Rev. G. U. Pope.

2. For he stands above all races, castes and sects, and what he teaches, is a general human morality and wisdom. No wonder that the Kural has not only been much read, studied and highly prized in the land of its origin for centuries, but has also found many admirers in the west ever since it has become known. –Prof. Winternitz.