பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

அவர் உங்கள் குடிமக்களில் ஒருவராக இருப்பவர். அப்படி இருக்க, ஒரு சாமான்யமான புலவனைப் போல நீங்கள் பெருமையைக் குறைத்துக் கொள்ளலாமா? அது. முறை அன்று” என்றார் புலவர். அதைக் கேட்ட பாண்டிய மன்னன் அந்தப் புலவருடைய அறியாமைக்கு இரங்கினான். “சோழ அரசர்கள் முடி மன்னர்கள் அல்லவா?” என்று கேட்டான். “ஆம்” என்றார் புலவர்.

“கிள்ளி வளவன் என்ற சோழனைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா ? அவன்ஒரு வேளாளனைப் பாடியிருக்கிற பாடலை நீங்கள் பார்த்ததுண்டோ?”

“யாரைப் பாடினான்?”

“சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியிருக்கிறான்.”

புலவர் சிறிது யோசித்தார்.

பிறகு, “ஏதோ ஒரு பாட்டு அரைப் பாட்டு அவசியமான சந்தர்ப்பத்தில் பாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு முழு நூலை யாரும் பாடியிருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களைக் குறைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், பாண்டியனுடைய மரபுக்கே இழுக்கு உண்டாகுமாறு செய்து விட்டீர்கள்” என்று மிடுக்குடன் சொன்னார்.

சிறிது நிதானமாகப் பாண்டியன், “புலவரே. உங்கள் மனம் எனக்குத் தெரியும், எங்கள் மரபு உயர்வு உடையது. சமானமானது அல்ல என்று