பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இரண்டாகப் பிளந்து வீசிய சராசந்தனுடைய உடல் மீளவும் பொருத்தி ஒன்றாகியது. சராசந்தன் உடனே எழுந்து தோள் கொட்டி ஆர்த்தான். வீமன் அதுகண்டு வியந்து, மறுபடியும் போர் செய்யத் தொடங்கினான். முன்னிலும் ஏழு மடங்கு பலம் கொண்டு அவனை உதைத்துத் துகைத்தான், சராசந்தன் உடல் மீண்டும் இரண்டு பிளவாகியது.

அந்த இரண்டு பிளவுகளும் மறுபடியும் ஒன்றுபடும் எனத் தோன்றியது. வீமனும் அர்ச்சுனனும் உண்மையை அறியாதவர்கள், கண்ணனோ அதைச் சேராதவாறு எண்ணி, அருகிலே கிடந்த ஒரு துரும்பை எடுத்து அதை இரண்டாகக் கிழித்து. பிளவுகள் இரண்டையும் தலை மாற்றிக் கீழே போட்டான்.

குறிப்புணரும் அறிவுமிக்க வீமன் அதை உணர்ந்து கொண்டு, சராசந்தனுடைய உடலின் பிளவுகளைத் தலையும் காலும் மாறிக் கிடக்கும்படியாக விடைவிலேயே மாற்றிப் போட்டான். சராசந்தன் மீள வழியில்லாமல் இறந்தான்.

பேசாத பேச்சினால் வீமனுக்கு வெற்றியை வழங்கிய மாய கோபாலனை யாவரும். புகழ்ந்தார்கள்.