பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

“மோன மென்பது ஞான வரம்பு” என்று ஒளவை பாட்டி. இதைத்தான் கூறுகிறார். 



13. கொடுப்பதில் இன்பம்

க்தர் ஒருவர், பலரிடம் பொருள் ஈட்டி, ஒரு கோவிலைக் கட்டலாம் என்று எண்ணினார். தம்முடைய கருத்தைப் பல செல்வர்களிடம் கூறி, அவர்களால் இயன்றதைக் கொடுக்கும்படிக் கூறினார். அப்படி அவர்கள் கொடுத்ததைச் சேர்த்து வந்தார்.

அந்த ஊரில் ஒரு கஞ்ச மகாப்பிரபு இருந்தார். அவரிடமும் போகலாம் என்று அந்தத் தொண்டர் முடிவு செய்து கொண்டார். ஒரு நாள் தம் முடிவின்படி அந்தக் கஞ்சன் வீட்டிற்கும் போனார். அவரைப் பார்த்துக் கஞ்சன், “எங்கே வந்தாய்?” என்று கேட்டான். “நான் பலருடைய நிதி உதவியால் ஒரு கோவில் கட்டலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

அந்தக் கஞ்சன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். “தங்களிடமும் திதி உதவி பெறலாம் என்ற எண்ணத்தில் வந்தேன்” என்று அந்தத் தொண்டர் கூறினார். அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு தராத அந்தக்