பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அழைத்து உபசாரம் செய்தார், ஔவையாரோடு வேறு சில புலவர்களும் வந்திருந்தார்கள் . இந்தத் தமிழ் மூதாட்டியாருடைய வாயிலிருந்து எந்தச் சமயத்தில் என்ன முத்து உதிருமோ? அதனை உடனே பொறுக்கிக் கொள்ள வேண்டும்? என்று மிகுத்த ஆவலோடு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் செல்வர் எல்லோருக்கும் ஆறு சுவைகளை உடைய விருந்துணவை அளித்தார். யாவரும் விருந்துணவை உண்டு விட்டு, தாம்பூலம் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர் ஔவையாரை நோக்கி, “தாங்கள் இந்த ஊருக்கு எழுந்தருளியது கலைமகளே எழுந்தருளியது போல் உள்ளது. தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்தச் சிறிய ஊருக்கு வருவதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை! நாங்கள் செய்த புண்ணியம் என்று சொல்வதற்கில்லை. இந்தப் புண்ணியவான் இந்த ஊரில் வாழ்வதனால்தான் தங்களைப் போன்றவர்கள் இந்த ஊரைத் தேடி வருகிறார்கள்” என்றார்.

இதற்குள் அந்த உபகாரி, “தாத்தா, வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள்” என்றார்.

கிழவர் . மேலும் ஒளவையாரைப் பார்த்து, “தாங்கள் தெய்வாம்சம் உடையவர்கள். தங்கள் திருவாக்கால் இந்தப் புண்ணியவானை