பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33



7. செருக்கை இழந்த புலவர்

சோழ நாட்டில் பிறந்து வளர்ந்த புலவர் அவர். தமிழ்ப் புலமையில் சிறந்தவர் ஆயினும் இறுமாப்பு மிகுதியாக உள்ளவர். தம்முடைய புலமைத் திறத்துக்கு யாரும் ஈடு நிற்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது அவர் கருத்து மற்றப் புலவர்களைக் கண்டால் அவர்களைக் கேள்விகள் கேட்டு, அவர்கள் பாடல்களில் குற்றங்கள் கண்டும் அவமானப் படுத்துவார். நல்லவர்கள் அவரைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள்.

அந்தப் புலவர் பாண்டிய நாட்டுக்கும் சென்று தம்முடைய புலமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். இதுவரையில் அவர் மதுரைக்குச் சென்றதில்லை. ஆனால் அங்கே புலவர்கள் பலர் இருப்பது அவருக்குத் தெரியும்.

மதுரை மாநகருக்கு அவர் சென்றார். அங்குள்ள புலவர்கள் சோழ நாட்டுப் புலவரை அன்போடு வரவேற்றார்கள். அவரோடு மகிழ்ந்து பேசிச் சோழ நாட்டுச் செய்திகளை விசாரித்து அறிந்து கொண்டார்கள். சோழ நாட்டுப் புலவர் பேசும்போதே அந்தப் பேச்சில் அகங்காரம் குமிழியிட்டது. பாண்டியனுடைய அவைகளப் புலவர்கள் அதைக் கண்டு விட்டார்கள். அவர் தம்முடைய பெருமைகளை அடுக்கிக் கொண்டே