பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

கணவன் வீட்டிற்குப் போன போதும் கூட அவள் அந்தப் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு போனாள். அதைவிடமால் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள் மாமியார், “என்னடி இது பைத்தியம் மாதிரி ஒரு கட்டையை வைத்துக் கொண்டு கொஞ்சுகிறாய்?” என்று கேட்டாள்.

“இது கட்டையல்ல. பிள்ளையார், கண் கண்ட தெய்வம், இதனால் எனக்கு எவ்வளவோ நன்மை உண்டாயிற்று” என்று அந்தப் பெண் சொன்னாள். அவளுடைய மாமியார், அந்தக் கட்டையினிடத்தில் உனக்கு அவ்வளவு பிரியம் என்றால் உனக்குக் கணவன் எதற்கு? இந்த வீட்டிலே நீ இருக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டையைத் தூர எறிந்து விட்டு வந்தால், நீ இங்கே இருக்கலாம். இல்லாவிட்டால் நீயும் இந்தக் கட்டையை எடுத்துக் கொண்டு போய்விடு” என்று சொன்னாள்.

அதைக் கேட்டு அந்தப் பெண் மிகவும் கலங்கினாள். என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. பிள்ளையாரைக் கைவிட அவளுக்குச் சிறிதும் மனம் வரவில்லை. ஆகையால் ஒரு நாள் இரவு பிள்ளையாரை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு புறப்பட்டாள்.

இரவு நேரத்தில் எங்கே தங்குவது என்று தெரியாமல் விழித்த போது அருகில் ஓர் அரச