பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

 புலவர்கள் அமர்ந்திருந்த சபையில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

    ஒரு நாள் பாண்டிய மன்னன் தனக்கு, வேண்டிய புலவர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தான். கலம்பகம் பாடியதைக் கேட்டு, முதலியார் சொன்னதை அந்தப் புலவரிடம் சொன்னான் அந்தப் புலவர் முதலியாரின் பணிவைப் பாராட்டடவில்லை. “பார்த்தீர்களா! நான் அப்போதே நினைத்தேன்” என்றார். “என்ன நினைத்தீர்கள்?” என்று பாண்டியன் கேட்டான்.

“அவர் வேளாளர். நீங்கள் முடி மன்னர்களாகிய பாண்டிய வம்சத்தில் உதித்தவர்கள்,