பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4. திருக்குறள் விளக்கு,

திருவள்ளுவர்: அப்படியா? நீங்கள் அந்தக் காட்சி யைக் கண்டு வருகிறீர்களா? நீங்கள் யார்? சொல்ல வில்லையே!

இந்திரன்: ஆம், நாங்கள் அந்தக் காட்சியைக் காணும் பேறுபெற்றோம். நாங்கள் இன்னாரென்று தாங்களே ஊகித்துக்கொண்டுவிட்டீர்களே! நாங்கள் விண்ணுலக வாசிகள்.

திருவள்ளுவர்: தேவர்களா?

இந்திரன் : ஆம்; ஏழையேன் இந்திரன். இந்த மூர்த்திதான் பிரமதேவர்; இந்தப் பெருமான் திருமால்.

திருவள்ளுவர் : அப்படியா? இப்போது அடியேன் பெற்ற பேறுதான் பெரும் பேறாகத் தோன்றுகிறது. அப்படியே யாவரும் அமர்ந்தருளவேண்டும். இந்த ஏழையிடம் நீங்கள் எழுந்தருளிய காரியம் இன்ன தென்று அடியேன் தெரிந்துகொள்ளலாமோ?

இந்திரன்: ஊர்த்துவ தாண்டவம் ஆடிய பெருமான் எங்களைத் தங்களிடம் அனுப்பினார். அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒரு நுட்பமான செயல் இருந்ததாம். அது எங்களுக்குத் தெரியவில்லை. தாங்கள் அதைப் புலப்படுத்துவீர்கள் என்று அருளி, எங்களை இங்கே வரப்பணித்தான் கூத்தப்பெருமான்.

திருவள்ளுவர்: சம்போ மகாதேவ இந்த ஏழையி னிடம் கேட்கவா வந்தீர்கள்? நான் ஒரு நெசவாளி. அறுந்துபோன நூலை நாக்கினால் எச்சில் படுத்தி நெருடுபவன். திருமாலுக்கும் பிரம தேவருக்கும் உங்களுக்கும் தெரியாததை, அங்கே வந்து கண் டறியாத பேதையேனா தெரிந்து கொள்பவன்?