பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



முத்துமணி ஒருநாளும் அழுததில்லை. அன்று அவள் அழுதுகொண்டு வந்ததைப் பார்த்ததும் தங்கம் மாளுக்குப் பொறுக்கவில்லை.

முத்துமணி, முத்துமணி, ஏன் அழுகிறாய்? என்று துடிதுடித்துப் போய்க் கேட்டாள் தங்கம்மாள்.

அம்மா...! அம்மா...! நான் தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை யாமே! பச்சைமணி சொல்கிறாள்...என்று சொல்லி முத்துமணி அழுதாள்.

என் கண்ணே, அவள் சும்மா சொல்கிறாள். பொய் என்று சொல்லி அவள் அழுகையை நிறுத்த முயன்றாள் தங்கம்மாள், முத்துமணியின் கண்ணை யும் கன்னத்தையும் துடைத்துவிட்டாள்.

இல்லை அம்மா. நீங்கள்தான் பொய் சொல்லு கிறீர்கள்! என்னைப் பெற்ற அம்மா யார்? அவர்களை நான் பார்க்க வேண்டும். என்னை அவர்களிடம் கொண்டுபோய் விடுங்கள்!என்று சொல்லி அழுது கொண்டேயிருந்தான் முத்துமணி.

'முத்துமணி, நான் தான் உன்னைப் பெற்ற அம்மா! அந்தப் பெண் உன்னை அழவைத்து வேடிக்கை பார்ப்பதற்காகச் சொல்லியிருக்கிறாள். அழாதே கண்ணே!’’ என்று மேலும் ஆறுதல்சொல்வித் தேற்றினாள் தங்கம்மாள்.

முத்துமணி அழ அழத் தங்கம்மாளுக்கும் அழுகை யாக வந்தது, அம்மாவும் அழுவதைக் கண்டதும்