பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு நாட்டின் காவல் குறித்துப்போருடற்றி உயிர்கொடுப்பது நல்வினையென்றும், அவ்வாறு உயிர்கொடுத்துப் புகழ் கொள்வோரே சிறந்தோர் என்றும் தமிழ்மகன் கருதியிருந்தான். அக் கருத்தை அவனேயன்றி, அவன் மகளிரும் இனிதறிந்து இருந்தனர். பகைவருடன் போருடற்றச் சென்ற தமிழ்மகன் ஒருவன்றன் மனைமகளிர், , "நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் எனத் தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்” என்று பேசிக்கொள்கின்றனர். இந்நெறியில் மகளிர் வீரத் தீ எரிய நிற்கும் உள்ளமுடையராதலைச் சங்ககாலத் தமிழ்மகள் இயலறியும் நெறியிற் புலப்படும். மனைவாழ்க்கையில் பொருளிட்டல், கல்வியறிவு பெறுதல், வினைசெய்து நாடுகாத்தல் முதலியன செய்தொழுகும் தமிழ் மகன் மகப்பேறு குறித்து மகிழ்கின்றான். மக்களையில்லாத வாழ்க்கையை விரும்புவதிலன், "மக்களை இல்லோர்க்குப் பயக் குறையில்லை தாம்வாழும் நாளே” என்று கூறுவன். பெற்ற மக்கள் தம் குடியின் உயர்ச்சிக்கு உழைத்தல் வேண்டுமெனக் கருதுகின்றான்.அன்ன மக்களைப் பெற்றோரை வாயார வாழ்த்தி மகிழ்வன். . “எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பயந்தனை” என்று பாராட்டுதலைக் காண்க . இனி, இவனது உள்ளத்தே கடவுள் உணர்ச்சி வீறுபெற்று நிற்கின்றது. “பல்லோரும் பரம்பொருள் ஒன்று உண்டு அதன்பால் பரிவுகொடு பரசி வாழ்தல் எல்லோரும் செய்கடனாம்” என்று கருதி வாழ்பவன். இவன் ஆண்டவனை வழிபட்டு வேண்டுவன மிக்க வியப்புத் தருவனவாம். சங்க காலத்தே ஏனை நிலத்து மக்கள் வேண்டியன வேறு. பிறர் அழிவதையும், பிறர் ஆக்கம் கெடுவதையும் பொருளாகக் கருதி ஆண்டவனை வேண்டினர் பிறர் தமிழன், . "யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமு மல்ல, அருளும் அன்பும்அறனும் மூன்றும் என்றும்,