பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! 47 அவற்றின் அறிவை மறைக்கும் பல்வேறு ஆற்றல்களை யுடையதாய் இருப்பது, மேலும் இம்மலத்துக்கும் உயிர்கட்கு முண்டான தொடர்பு செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்புபோல, என்று உயிருண்டு அன்றே மலமும் உடனுண்டு என்னும் பழமைத் தொடர்பாகும். இவ்வாறு தொன்மைத் தொடர்புடையதாயினும் உயிரறிவை மறைத்து இருளாய்த் தோன்றும் இம்மலம் சிவமுதற் பொருளின் அருளொளியால் மறைப்பு நீங்கும் தன்மையுடையது. இவ்வாறு மலத்தால் தோன்றும் அகவிருளை நீக்குதற்கு முதல்வன் திருவருள் துணையாவதுபோல, அத் திருவரு ளாற்றலால் தோற்றுவிக்கப்படும் உடல், கருவி, உலகு, நுகர்ச்சிகளாகிய மாயையும், துணையாகும். இம்மாயையின் காரியமாகிய உடல் முதலியன மலவிருள்களைச் சிறிது நீக்கி உயிரறிவு தொழிற்படுதற்குரிய விளக்கத்தைத் தருகின்றன. இந்த மாயை சுத்தமாயை அசுத்தமாயை என இருவகைப்படும். இனி, இந்த உயிர்கள் நல்வினை தீவினை யென்ற இரண்டினையும் செய்தற்கு ஏதுவாக இருப்பது கன்மம். இந்த மலமாயை கன்மங்களோடு கூடி நின்று இவற்றைத் தொழிற்படுத்தி உயிர்கள் கட்டினின்றும் நீங்குதற்கேற்ற செவ்வி பெறுவிக்கும் அருளாற்றும் உண்டு. அது திரோதானம் என்று வழங்கும், திரோதானம் மறைப்பது, மல முதலியவற்றோடு கலந்து நின்று மறைத்தலைச் செய்விப்பதுபற்றி இப்பெயர் உண்டாயிற்று. இவ்வாற்றல் மலம், சுத்தமாயை, அசுத்தமாயை, கன்மம், திரோதம் எனக் கட்டு ஐந்தா தலைக் காணலாம். இந்த ஐந்தையும், சிவஞான முனிவர் “ஒன்றாகி அழிவின்றிப் பலவாற்றலுடைத்தாய்ச் செம்புறுமா சென்னத் தொன்றாகி அருள்விளையில் நீங்கும் இருள் மலத்துடன் அத்தொடக்குநீப்ப - மின்தாவும் உடலாகி நல்கும் இருமாயை இருவினைகட்கேது என்றோதுகருமம் இவை நிகழ்த்துதிரோ தமும் என்னும் ஐவகைப் பாசத்தை என்று உரைத்தருளுகின்றார். இதுகாறும் கூறிய சிவம், உயிர் கட்டு எனப்படும் மூன்றினையும் சிறப்புற அறியும் அறிவு மெய்ஞ்ஞானம் எனப்படும். இம்மூன்றின் இலக்கணத்தையும் பொதுவிலக்கணம் சிறப்பிலக்கணம் என இரண்டாகக் கூறுவர். சிவமுதற்பொருளில் பொது விலக்கணம சிறப்பிலக்கணம் என்றும் இலக்கணம்