பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு கலாநிதி என்று அவர் புகழ்ந்து போற்றப்பட்டது சாலவும் பொருத்தமானதே! உரைவேந்தர் உரையெழுதித் தமிழ் உலகிற்கு ஏற்றம் வழங்கிய பணியின் சிகரமாக விளங்கியது வள்ளலாரின் திருவருட்பாப் பாடல்கள் அனைத்திற்கும் தெளிவும் நுட்பமும் திட்பமும் மிகுந்த அவரது உரைவளமாகும். இம்மகத்தான முயற்சியில் முழுமையாக அவரை ஈடுபடச் செய்து பெருந்துணையாக நின்ற பெருமைக்கு உரியவர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் ஆவார்கள். உரைவேந்தராக மட்டுமல்ல நாவேந்தராகவும் திகழ்ந்தவர் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள். தமிழ்ப் பேராசிரியராக அவர் உருவாக்கிய எண்ணற்ற மாணவர்கள் தகைசால் அறிஞர்களாயினர். சென்ற நூற்றாண்டில் தமிழ் உரை உடை வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர் ஒளவை துரைசாமி அவர்கள். தம் காலத்து மக்களிடம் தமிழ் சிறந்தோங்க உழைத்தவர். பழைய உரையாசிரியர் நடையில் அமைந்த தமிழ் வளம் இவர் படைப்புகளில் காணலாம். ஆயின் தமிழ் ஒருவாறு கற்றவர்களுக்கும் விளக்கமாகும் வகையிலும் எழுதியவர். எளிமையும் இனிமையும் இவருடைய நடையின் சிறப்பியல்புகள் எனலாம். சிறந்த ஆராய்ச்சி உண்மைகள், அறிவுலகச் சிந்தனைகள் ஆகியவைகளோடு ஆராய்ச்சி நெறியினை அறிவித்த ஒரு முன்னோடி என்று ஒளவை அவர்களைக் கருத வேண்டும். இப்பெருமகனாரின் நூற்றாண்டு விழா வெற்றிகரமாக நடைபெறுவதாக! х இலக்கண நூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாள! விலக்ககிலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்த நற்கலைஞ! நின்வருகை நன்றே யாக! - ந. ரா. முருகவேள்.