பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

"நீ எனக்கு வழி சொல்லுகிறாயா? சொல் பார்க்கலாம்” என்று மேலும் அவநம்பிக்கையோடு கண்ணன் பேசினான்.

"கண்ணா, அவநம்பிக்கை கொள்ளாதே. முருகன் திருவருளால் உன் மகள் பொன்னிக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். நான் சொல்கிறபடி கேள். பக்கத்திலுள்ள பாலப்பட்டி என்ற ஊரில் வாழும் பண்ணையார் மகன் கந்தசாமிக்கு இந்த வட்டாரத்தில் யாரும் பெண் கொடுக்க விரும்பவில்லை. நீ போய்ப் பண்ணையாரைப் பார்த்து உன் மகளைத் திருமணம் செய்து தருவதாகச் சொன்னால் உடனே ஒப்புக் கொள்வார். ஏழை என்பதற்காக வெறுத்து ஒதுக்க மாட்டார். அவருக்கு உன் முதலாளி வீட்டைப் போல் இரண்டு பங்கு பெரிய வீடும் நிறைய நிலபுலன்களும், பிற சொத்துக்களும் இருக்கின்றன. நீ கனவு கண்டது போல் உன் மகள் மிகப் பெரிய வீட்டில் எல்லா வளன்களோடும் வாழ்க்கை நடத்த இது நல்ல வாய்ப்பு. உடனே நீ போய்ப் பாலப்பட்டிப் பண்ணையாரைப் பார்?’ என்று சொல்லி விட்டு அந்த மயில் தன் அழகிய இறக்கைகளை விரித்துக் கொண்டு தாவிப் பறந்து சென்றது.

குழம்பிப்போய் நின்ற கண்ணன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மலை மேல் ஏறிச் சென்றான். முருகன் முன்னால் சென்று வணங்கினான். நிமிர்ந்து கடவுளை நோக்கினான். சிரித்த முகத்தோடு