பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நீர்ப்பறவைகளும் பூங்கொடிகளும்

ர் ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளம் நிறையத் தண்ணீர் இருந்தது. தண்ணீர் நிறைந்திருந்ததால் அந்தக் குளம் மிகஅழகாக விளங்கியது. அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீர்ப் பூங்கொடிகள் இருந்தன. கொக்கு நாரை போன்ற நீர்ப்பறவைகளும் இருந்தன. எல்லாம் ஒரு குடும்பம் போல் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அந்தக் குளம் தன் உறவினர்களான பூங்கொடிகளுக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிக்கக் கொடுத்து உயிர்வாழச் செய்தது. அது போலவே, அன்புடன் தன்னிடமுள்ள மீன்களையும் நண்டு களையும் நீர்ப்பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து உறவாடிக் களித்தது.

ஒர் ஆண்டு உரிய காலத்தில் மழை பெய்ய வில்லை. ஊரே வறண்டு போய் விட்டது. பயிர் பச்சைகளும் விளையவில்லை. அந்தக் குளத்தில் இருந்த நீரும் சிறிது சிறிதாக வற்றி, கடைசியில் அடித்தரையும் காய்ந்து போய் விட்டது.

இனி அந்தக் குளத்தில் தங்களுக்கு உணவு கிடைக்காது என்றறிந்த பறவைகள் வேறு நீருள்ள குளத்தை நாடிப் பறந்து சென்று விட்டன.