பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முரடனும் மணியனும்

முரடன் ஒருவன் இருந்தான். அவன் தன் அரட்டல் உருட்டல்களாலேயே நாள் பிழைத்து வந்தான். வலியற்றவர்களை மிரட்டிப் பொருள் பறித்துத் தன் வாழ்வை நடத்தி வந்தான்.

அந்த ஊரில் மணியன் என்ற ஒருவன் இருந்தான். அவன் உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழை. உடலில் வலுவும் உள்ளத்தில் உறுதியும் இல்லாத ஒரு கோழை.

அவனுக்கு இந்த முரடனைப் பார்த்தாலே பயம். கண்டவுடன் உடல் நடுங்கும். முரடன் உறுமலைக் கேட்டவுடனே கையில் உள்ள காசைக் கொடுத்து விடுவான்.

அவசரமாகச் சில்லறை தேவைப்பட்டால் முரடன் மணியனைத்தான் தேடிவருவான். கேட்கு முன் கொடுக்கக் கூடிய ஒருவன் இருக்கும்போது அவனை விட்டு வைப்பானா அவன் ?

முரடன் பிழைப்பு இப்படிப் பல நாள் நடந்து வந்தது.

ஒரு நாள் முரடனுக்குக் காசு தேவைப்பட்டது. மணியனைத் தேடி வந்தான். மணியன் தன் குடிசைக்குள் இருந்தான். மணியா! மணியா!” என்று கூப்பிட்டான் முரடன். மணியன் மகன் சிறு பையன். அவன் வெளியில் வந்து "அப்பா