பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறமும் புகழும்

ர் ஊரிலே கண்ணப்பர் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரிய, பணக்காரரல்லர். இருப்பினும் அவர் தம் மகனுக்கு ஒரு நோய் ஏற்பட்டபோது ஏதாவது ஒரு நல்ல அறம் செய்வதாகத் தெய்வத்திடம் உறுதி செய்து கொடுத்தார். மகன் பிழைத்து விட்டான்.

உறுதியை நிறைவேற்ற வேண்டும். என்ன அறம் செய்யலாம் என்று சிந்தித்தார். அந்த ஊரில் குளம் இல்லை. குடிநீருக்காக அரைக்கல் தொலைவில் உள்ள குளத்திற்கு மக்கள் சென்று வந்தார்கள். இதைக் கருதிய கண்ணப்பர் தம் ஊரில் ஒரு குளம் வெட்டினார்.

குளம் வெட்டும் செலவுக்கு அவரிடம் பணம் இருந்தது அதற்குக் கல்லினால் கரையமைத்துப் படிபோடும் அளவிற்குப் பணம் இல்லை. ஆகவே அவர் கற்கரையும் படியும் அமைக்காமலே குளத்தை வெட்டி முடித்தார். குளத்தின் கரையில், "குளம் வெட்டியவர் கண்ணப்பர்” என்ற எழுத்துகள் பொறித்த ஒரு கல்லும் நாட்டினார்.

அதே ஊரில் நல்லப்பர் என்ற ஒருவர் இருந்தார். அவரும் செல்வரல்லர். சாதாரண