பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 67

கரையில்லாமல் ஒரு நீர்நிலை உலகத்தில் இருக்க முடியாது. சரி, கடலை எங்களுக்குக் காட்டுங்கள், பார்க்கலாம்” என்று வீரனும் சூரனும் கேட்டனர்.

ஊர்மக்கள் அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.

"கண்ணுக்கெட்டிய மட்டும் கரையே தென்படவில்லையே இதுதான் கடலா !” என்று வியந்தான் வீரன்.

“அதற்கும் அப்பால் கரையிருக்கும்” என்று உறுதியான குரலில் கூறினான் சூரன்.

"அப்பால் உள்ள கரைக்கு நீந்திச் சென்று திரும்பிவர உங்களால் முடியுமா?’ என்று கேட்டான் தோற்றுப்போன இளைஞன்.

"எங்களால் முடியாதது எதுவும் இல்லை" என்று கூறிக்கொண்டே கடலில் குதித்து நீந்தினர் வீரனும் சூரனும்.

"வீரனே! சூரனே ! வேண்டாம், வேண்டாம் ! திரும்பிவிடுங்கள்!” என்று ஊர்ப்பெரியவர்கள் கூவியழைத்தனர். ஆனால், கூக்குரல்களையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

அகன்று பரந்த கடலில் பச்சையலைகளினிடையே அவர்கள் சிறிதும் அஞ்சாது நீந்திச் சென்றனர். எவ்வளவு நேரம் நீந்தியும் அவர்கள் மறு கரையைக் காணமுடியவில்லை. கரையில் நின்ற மக்கள் இனி அவர்கள் திரும்பமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு கலைந்து சென்றுவிட்டார்கள்.