பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மரமும் மனிதனும்

ர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை. அதனால், பக்கத்து ஊருக்கு வேலை தேடிச் சென்றான். கட்டுச் சோற்று மூட்டையுடன் புறப் பட்டான். பக்கத்து ஊருக்குச் சென்று அவன் பிற்பகல் முழுவதும் வேலை தேடியும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் தன் ஊருக்குத் திரும்பினான்.

திரும்பி வரும் வழியில் வெயில் கொளுத்தியது. அவனுக்குக் களைப்பாக இருந்தது. பசியெடுத்தது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று தேடினான். சிறிது தூரத்தில் ஒரு பூவரசு மரம் இருந்தது. நேரே அந்தப் பூவரசு மரத்தை நோக்கி நடந்தான். அதன் அடி நிழலில் உட்கார்ந்தான். கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்து வயிறாரச் சோறு உண்டான். பிறகு கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அங்கேயே படுத்து விட்டான்.

மரத்தின் அடியில் படுத்திருக்கும் போதே அவனுக்கு ஓர் எண்ணம் பிறந்தது.

எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த மரத்தை வெட்டி விறகாக விற்றால் பணம் கிடைக்குமே என்று அவன் எண்ணினான் உடனே தன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். ஒருவரிடம் கோடரி வாங்கிக் கொண்டு வந்தான். அடுத்து

ந. சி. I-2