பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நீச்சல் வீரர்கள்

மிகப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் வீரன்; மற்றொருவன் பெயர் சூரன். வீரனும் சூரனும் ஆற்றல் மிக்கவர்கள். மலை ஏறுவதிலும் மரம் ஏறுவதிலும் வல்லவர்கள். நீச்சற்கலையில் நிகரற்றவர்கள். வேல் வீசுவதிலும் வில் வளைப்பதிலும் வாள் சுழற்றுவதிலும் அவர்களையொப்பவர்கள் யாரும் கிடையாது.

வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்தோடும் சமயங்களில்கூட அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அக்கரைக்கு நீந்திச் சென்றிருக்கிறார்கள். ஏரி குளங்களில் நீந்துவது அவர்களுக்கு மிக எளிய கலை. இந்திர விழாவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில், எத்தனையோ முறை அவர்கள் முதற்பரிசு வாங்கியிருக்கிறார்கள்.

பாண்டி நாடு முழுவதும் அவர்கள் புகழ் பரவியிருந்தது. வெளிநாடுகளிலும் தங்கள் திறமையைக் காட்டி விருது பெற வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த எண்ணத்தைச் செயற்படுத்த அவர்கள் ஒரு நாள் பயணம் புறப்பட்டு விட்டார்கள்.

நாடு நாடாகச் சுற்றி அவர்கள் நல்ல பெயரும் புகழும் பெற்றார்கள். ஒருமுறை கடற்கரை அருகில் இருந்த ஒர் ஊருக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். புகழ்பெற்ற நீச்சல்காரர்கள் வந்திருக்கிறார்கள்