பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தம்பி மாணிக்கம்

அக்காலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த மீனவன்பட்டி என்ற ஊரில் சாத்தப்பர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு முத்து வாணிபம் பரமபரைத் தொழிலாயிருந்தது. கொற்கையில் கிடைக்கும் முத்துக்களைப் பிற ஊர்களில் கொண்டு போய் விற்பது அவருடைய தொழில்.

மீனவன் பட்டியில் அவர்தான் பெரிய செல்வர். ஆகவே, அந்த ஊரில் அவர் தந்நிகரற்று விளங்கினார். சாத்தப்பர் செல்வர். ஆகவே, அவருடைய சுற்றத்தார் பலர் அவர் மாளிகையிலேயே வந்து தங்கியிருந்தனர். சிலர் அவருடைய வாணிகத்திற்குத் துணை புரிந்தனர் சிலர் அவருடைய வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர் ; சிலர் ஒன்றும் செய்யாமலே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சாத்தப்பருடைய வீடு ஒரு சத்திரம் போல் காட்சியளித்தது. நாள்தோறும் ஐம்பது பேருக்குக் குறையாமல் பந்தியில் உட்காருவார்கள். சாத்தப்பருக்கு இதனால் ஒன்றும் குறை ஏற்பட்டு விட