பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிணியும் மருந்தும்

ர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் வயிற்றுவலி கண்டது. சிறிது நேரம் வலித்துக் கொண்டு இருந்து பின் விட்டுவிட்டது. ஏதோ உணவுக்கோளாறு என்று பேசாமல் இருந்து விட்டான். பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. வலிக்கிறவரை வயிற்றை அமுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்து வலி விட்ட பின் அதைப்பற்றி மறந்தே போய்விட்டான்.

நாளாக ஆக அடிக்கடி வயிற்றை வலித்தது. வலி வந்தபோதெல்லாம் துன்பப்பட்டு, விட்ட பிறகு அதைப் பற்றிச் சிந்திக்காமலே இருந்துவிட்டான் அவன். அதனால் வயிற்றுவலி முற்றியது.

ஒரு நாள் மிக அதிகமாக வயிறு வலித்தது. அந்த வலி பொறுக்க முடியாமல் தான் இறந்து போக நேரிடுமோ என்றுகூட அம்மனிதன் அஞ்சினான். “என் கூடவே பிறந்து இந்த வியாதி என்னைக் கொல்கிறதே!” என்று அவன் துயரத்தோடு கூறினான்.

அன்று நாள் முழுவதும் வயிறு வலித்துக் கொண்டே இருந்தபடியால், அவன் எவ்வாறேனும்