பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செல்வனும் திருடனும்

ர் ஊரில் ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான். அவன் எப்படியெப்படியோ பணம் சேர்த்தான். ஊரிலேயே பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். ஆனால் அவன் பணக்காரனாக இருந்து என்ன பயன் ?

பெற்ற தாய் தகப்பனுக்குக்கூட ஒரு காசு கொடுக்க மாட்டான். பிள்ளை குட்டிகள் ஆசையாகக் கேட்கும் அற்பப் பொருள்களைக்கூட வாங்கிக் கொடுக்க மாட்டான். தன் வயிற்றுக்கே அவன் சரியாகச் சாப்பிடுவதில்லை.

சோற்றை வடித்துப் பச்சைமிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டால் போதும் என்பான். சாம்பார் வைக்க வேண்டுமென்றால் பருப்புப் படி ஒரு ரூபாயல்லவா? ஏன் வீண் செலவு என்று கேட்பான்.

உறவினர்கள் யாரும் அவனைத் நாடி வருவதேயில்லை. ஏதாவது உதவி செய்யக் கூடிய வனாய் இருந்தால் அல்லவா அவனை தேடி வருவார்கள் .

அவனுக்கு நண்பர்களே கிடையாது. யாராவது ஆபத்துக் காலத்தில் வந்து கைமாற்றுக் கேட்டால்