பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண் 30. தெய்வப்புலவர் திருவள்ளுவர் 31. புது நெறித் தமிழ் இலக்கணம் (இரு பகுதிகள்) 32. Introuction to the study of Thiruvalluvar 33. மருள் நீககியார் நாடகம் 34. மத்தவிலாசம் (மொழியாக்கம்) சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல், சைவசித் தாந்தத்தின் திலகம், - - மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும் வான்சுடர், வள்ளலார் நூலின் இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி; இமயத்தைப் புலமையால் தாழ்த்தும் துங்கமார் ஒளவை நம் துரைசாமித் தோன்றலுக் குரியதிந் நூலே - டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் - அதியன் இன்றில்லை கவிஞர் மீ.இராசேந்திரன் (மீரா) பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான்; பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான்தாங்கள் இந்த நாளில் - கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்று.தமிழ் வளர்த்த தாலே தாங்கள்.அவ்-ஒளவைதான்! ஒளவைய்ேதான்! அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால் அடடாவோ ஈதென்னவிந்தை இங்கே புதியதொரு ஆண்ஒளவை எனவியப்பான் பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர் அதிமதுரக் கருநெல்விக்கனிகொணர்ந்தே அளித்துங்கள்மேனியினைக்காதலிக்கும் முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!