பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 நல்வழிச் சிறுகதைகள்

நண்பன் என்ற முறையில் அவன் ஒரு நாள் பெருமாளைச் சந்தித்து வரச் சென்றான்.

பெருமாள் படுத்திருந்தான். சதாசிவம் அருகில் சென்றபின்தான் அவன் நோயுற்றுப் படுத்திருக்கிறான் என்று அறிந்தான்.

சதாசிவம் ஆதரவான குரலில் பெருமாளை நோக்கி, மருந்து வாங்கிச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டான்.

"மருந்து வாங்கி சாப்பிடத்தான் வேண்டும். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. வீட்டில் துணைக்கு ஒருவரும் இல்லை...” என்று சொல்லிக் கலங்கினான் பெருமாள்.

"கலங்காதீர்கள், இதோ நான் போய் மருத்துவரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி சதாசிவம் விரைந்து சென்றான்.

மருத்துவர் வந்து பார்த்து, மருந்து கொடுத்துச் சென்றார். அதன்பின் பெருமாள் சதாசிவத்தை நோக்கி, நண்பரே, அண்ணன் தம்பியரோடு பிறந்த நீங்கள், என்னையும் உங்கள் உடன் பிறந்தவன் போல் பாவித்துச் செய்த உதவியை நான் மறக்கமாட்டேன்’ என்று கூறினான்.

தான் அண்ணன் தம்பியருடன் பிறக்க வில்லையே என்ற குறை அவன் பேச்சில் வெளிப் பட்டது. அதைக் கேட்டு சதாசிவம் உருகிப் போனான்.

கருத்துரை:-உடன் பிறப்பில்லாத வாழ்வு சிறந்ததாகாது