பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46 . நல்வழிச் சிறுகதைகள்

வில்லை, வாணிகத்தில் நல்ல வருவாய் கிடைத்ததால், அவருக்கு இது ஒரு செலவாகவே தோன்றவில்லை.

தம் வீட்டில் இவ்வளவு பேர் இருந்து சாப்பிடுகிறார்களே, இதனால் அதிகச் செலவாகிறதே என்று அவர் நினைத்ததேயில்லை. சுற்றத்தார் சூழத் தாம் இருப்பதே இன்பம் என்று கருதினார். தாம் ஈட்டும் பொருள் இத்தனை பேருடைய வாழ்வுக்கும் பயன்படுகிறதே என்று மகிழ்ச்சியடைந்தார். தம்மைச் சார்ந்திருக்கும் அனைவரையும் .தொடர்ந்து காப்பாற்ற, மேலும் பணம் திரட்ட வேண்டும் என்ற ஊக்கத்தோடு வாணிகத்தில் அவர் முழு மூச்சாக ஈடுபட்டார்.

ஒரு நாள் ஒர் ஏழைச் சிறுவன் அவரைத் தேடி வந்தான். அவன் வந்து சேர்ந்தபோது, அவர் ஊரில் இல்லை. மறுநாள்தான் அவர் வெளியூரிலிருந்து வந்து சேர்ந்தார். அவர் இல்லாதபோது அவன் அவர் வீட்டில் நுழையவில்லை. வெளியிலேயே நின்றான். வீட்டில் இருந்தவர்கள் அவனைச் சாப்பிட்டாயா என்று கூடக் கேட்கவில்லை. வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து விட்ட அவனிடம் யாரும் இரக்கம் காட்டவில்லை. அவன் சாத்தப்பர் வரும் வரை பசிக்கும் வயிறோடு வாசலில் உட்கார்ந்திருந்தான்.

சாத்தப்பர் வெளியூரிலிருந்து வந்து, வீட்டு வாசலில் இறங்கினார். படியில் காலடி எடுத்து வைக்கப் போகும் போது, “ஐயா !” என்று ஓர் ஈனக்