பக்கம்:கள்வர் குகை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நம்பி குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டுத் தன் குடிசைக்கு வந்தான். அங்கே, பாண்டியனும், வேடர். தலைவனும் உட்கார்ந்திருந்தார்கள். அங்கே வந்த நம்பபி! “அப்பா! இன்று காலையில் மாமரத்தடியில் ஒரு குதிரை நின்றது. அதைப் பிடித்துக்கொண்டு, சவாரிக்குக் கிளம்பினேன். அந்தக் குதிரைக்காரன், அவனுடைய ஆட்களை விட்டு விரட்டினான். நான் அகப்படவே. இல்லையப்பா.” என்று தன் திறமையைக் கூறினான். “ஏண்டா, அரசருடைய குதிரையை, ஆணையில்லாமல் சவாரிக்குக் கொண்டு போகலாமா?” என்று அதட்டினான் வேடத் தலைவன். அவன் உடனே பாண்டியனைப் பார்த்து, “ஏனையா, நீரே சொல்லும், சவாரி செய்து பார்த்தால் என்ன குறைந்து விடும். இதற்கெல்லாம், உத்தரவு கேட்டால் நடக்குமா?” என்று தட்டிக் கேட்டான். பாண்டியனுக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வருத்தமுமாக இருந்தது. அவன் வேடர் தலைவனை முறைத்துப் பார்த்தான். உடனே வேடர் தலைவன், “டே நம்பி, எட்ட நின்று பேசு! அரசரிடம் இப்படித்தான் பேசுவதா?” என்று அதட்டினான். உடனே நம்பி, ஓகோ இவர்தான் பாண்டியரா? ஏனையா நீர் ஐநூறு குதிரை வைத்திருக்கிறீரே, இந்தக் குதிரையை எனக்குத் தந்துவிடும். இது மிக அருமையான குதிரை. என் சவாரிக்கு ஏற்ற குதிரை! நானே வைத்துக் கொள்கிறேன். சரிதானே?” என்று கேட்டான். அரசன் என்று தெரிந்த பிறகும் சிறிது கூட அஞ்சாமற் பேசும், தம்பியின் மீது பாண்டியனுக்கு ஒரு வகையான அன்பு பிறந்தது. சரி நாளைக்கு வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/9&oldid=1475206" இலிருந்து மீள்விக்கப்பட்டது