பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



58 நல்வழிச் சிறுகதைகள்

இரண்டு நாட்கழித்து அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் மாமரத்தைத் தேடி வந்தன. “மாவம்மா !! நேற்றெல்லாம் 'ஒ'வென்று அலறிக் கொண்டிருந்தாயே ஏன்?’ என்று கேட்டது அணிற்பிள்ளை.

"இதென்ன அநியாயம்! மாமரத் தாயே! உன் கிளைகளெல்லாம் ஏன் முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம் கீழே விழுந்து அழுகிக் கிடக்கின்றனவே, ஏன்?" என்று பதறிப் போய்க் கேட்டது கிளிப்பிள்ளை

"பிள்ளைகளே, நேற்று சுழற்காற்று என்கிற முரடன் வந்தான். அவன் செய்த அட்டுழியம்தான் இது" என்று கூறிக் கண்ணீர் விட்டது மாமரம்.

மாமரத்தின் துன்பத்தைக் காணப் பொறுக்காமல் கிளிப்பிள்ளையும் அணிற்பிள்ளையும் கண்ணீர் விட்டன

அவற்றிற்குப் பழம் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்று மாமரம் வருந்தியது. பின்னர் அவையிரண்டும் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.

கருத்துரை:- நல்லவர்கள் வரவால் இன்பம் ஏற்படும். தீயோர்கள் வரவால் துன்பமே உண்டாகும்.