பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 27

போராடும் நெஞ்சுறுதியற்ற உங்களுக்கு வாள் ஒரு கேடா ?’ என்று சொல்லிக் கொண்டே திருமாவலி அர்ச்சுனன் மேல் பாய்ந்தான். சிவனடியார் இருவரும் திகிலுடன் ஒதுங்கி நின்றனர். அர்ச்சுனன் கூட வந்த பத்து வீரர்களும் திருமா வலியின் மீது பாய்ந்தனர். ஆயுதமற்ற ஒருவன் மீது வாள் பிடித்த பதினோரு வீரர் பாய்கிறோமே, இது சரிதானா ? வீரத்திற்கழகா ?’ என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேயில்லை. கோழையான தங்கள் மன்னன் ஆணையை நிறைவேற்ற அவர்கள் பெருங்கோழைகளாக நின்று செயலாற்றினார்கள்.

திருமாவலி ஆள் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவில்லை. அர்ச்சுனன் மீது பாய்ந்து அவனோடு போராடும் போது மற்ற பத்து வீரர்களும், தங்கள் வாள்களால் அவன் முதுகிலும் விலாவிலும் தாக்கிக் காயப்படுத்தினார்கள். அர்ச்சுனனை மடக்கி அவன் கைவாளைப் பறித்த பின் திருமாவலியை அந்தப் பதினோரு பேராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை! அவன் கைக்கு வந்த வாள், காற்றினும் வேகமாகச் சுழன்றது. எதிர்த்து நின்ற பகை வீரர்களை ஒவ்வொருவராகக் கொன்று தீர்த்தது.

பத்து வீரர்களும் செத்து மடிந்தார்கள். கடைசியில் அர்ச்சுனன்தான் மீந்திருந்தான். “அற்பனே, நான் உன்னை வாள் கேட்டேன். தர மறுத்தாய்! இப்போது நான் உனக்கு வாள் தருகிறேன். வா போராட!” என்று இறந்த