பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44 நல்வழிச் சிறுகதைகள்

நாளுக்கு நாள் சிட்டுக் குருவியின் செருக்கு அதிகப்படுவதைக் கண்ட மற்றப் பறவைகள் அதன் மேல் வெறுப்புக் கொண்டன.

சிட்டுக் குருவியிடம் அவமானம் அடைந்த சில பறவைகள் பருந்திடம் சென்று முறையிட்டன. சிட்டுக் குருவியின் அளவு கடந்த செருக்கைப் பற்றி பருந்து கேள்விப்பட்டது.

கோபங்கொண்டு பருந்து பறந்து வந்தது. "ஏ ! சிட்டுக் குருவி !’ என்று அழைத்தது. சிட்டுக் குருவி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கல்விக் கடலே’ என்று அழைத்து வணக்கம் கூறினால்தான் அது பேசும் என்று கூட இருந்த பறவைகள் கூறின. ஆனால் பருந்து அவ்வாறு அழைக்கவில்லை.

"அற்பக் குருவியே உனக்கு இவ்வளவு ஆணவமா !” என்று கேட்டுக்கொண்டே சிட்டுக் குருவியை நெருங்கியது. பிடித்து வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டது.

கருத்துரை :- செருக்குக் கொண்டவர்கள் வெறுப்புக்காளாவார்கள். செருக்கே அவர்களைக் கொல்லும் பகையாகும்.