பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 71

நண்பர்கள் முத்து வடுகநாதனை அழைத்துக் கொண்டு அந்த ஒலைச் சுவடிகளுடன் அரசம் பட்டிக்குச் சென்றார்கள். மங்கலங்கிழார் அந்தக் கவிதைகளைப் பற்றி என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு மதுரைக்குச் சென்று சங்கப் புலவர்களோடு வாதிடுவது என்பது அவர்கள் திட்டம்.

அவர்கள் மங்கலங்கிழார் வீட்டையடைந்த போது, அவர் அங்கில்லை. பக்கத்தில் உள்ள பூஞ்சோலைக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். உடனே, இளைஞர்கள் அந்தப் பூஞ்சோலைக்கே சென்றார்கள்.

இளைஞர்கள் சோலைக்குப் போய்ச் சேர்ந்த போது மங்கலங்கிழார் ஒரு மேடை மீது அமர்ந்து, சோலைப் பறவைகளின் அழகில் ஈடுபட்டிருந்தார். இளைஞர்கள் சிலர் தம்மைப் பார்க்க வந்திருப்பதை யறிந்தவுடன், அவர்களை அன்புடன் வரவேற்று தம்மருகில் மேடையின் மீது அமரும்படி கேட்டுக் கொண்டார்.

இளைஞர்களை நோக்கி அவர்கள் வந்த நோக்கத்தை விசாரித்தார்.

அவர்கள் நடந்ததெல்லாம் விரிவாகக் கூறினார்கள்.

மங்கலங்கிழார், அவர்கள் கொண்டு போயிருந்த ஒலைச் சுவடியை வாங்கினார். அதில் ஓர் ஏட்டைப்