பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40 . நல்வழிச் சிறுகதைகள்

உங்களில் யாராவது அவருடன் வாதிட விரும்புகிறீர் ளா ?” என்று கேட்டார் பாண்டிய மன்னர்.

ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களாகிய சங்கப் புலவர்கள் அனைவரும் வாய் திறவாது அமைதியாக வீற்றிருந்தார்கள். அவர்களில் முதுபெரும் புலவராக வீற்றிருந்த சாத்தனார் பாண்டித் திருதாடனை நோக்கிச் சில மொழிகள் புகன்றார்.

“மன்னவா ! உன்னைப் போன்ற அரசர்கள் ஒருவரை யொருவர் போரிட்டு வென்று புகழ் நாட்டலாம். ஆனால், புலவர்கள் தம் புகழை நிலைநாட்ட, வாதிட்டுப் போராட வேண்டியதில்லை. சங்கப் புலவர்கள் இதுநாள்வரை யாருடனும் வாதிட்ட தில்லை. ஏன் ? வாது வழி தீது என்பதால்தான் ! வென்றவர் எக்களிக்கவும், வெல்லப்பட்டவர் துக்க மிக்குறவும் செய்யும் வாதுக்குத் தமிழ்ப் புலவர்கள் எக்காலத்தும் ஒப்பியதில்லை. சூதும் வாதும் வேதனை செய்யும். அறிவுக்கு எல்லையில்லை. ஒருவர்க்கு ஒன்று எளிதாகவும், ஒன்று கடிதாகவும் இருக்கும். எதைக் கொண்டு அறிவை அசைக்க முடியும்?”

“திருவள்ளுவரை உலகம் உச்சி மீது வைத்துக் கொண்டாடுகிறது. அவர் யாருடன் வாதிட்டு இப் பெரும் புகழைப் பெற்றார் ? இரண்டு பேரிதிகாசங்களை இயற்றிய வான்மீகரும் வியாசரும் எங்கே போய் வாதிட்டார்கள் ?”

சாத்தனாரின் இந்தத் தெளிவுரைகளை அரிசங்கரர் என்ற அந்தப் புலவர் ஏற்றுக் கொள்ளவில்லை.