பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 நல்வழிச் சிறுகதைகள்

முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. ஆகவேதான் அவை பேசாமல் நின்றன.

ஒரு நாள் எங்கோ தொலைவில் உள்ள ஒரு மலையில் மழை பொழிந்தது. தொடர்ந்து பெரு மழை பெய்தபடியால் ஆறு பெருக்கெடுத்தது. வெள்ளம் பெருகி ஓடிவரும் ஆறு, தன் வேகத்தால் வழி நெடுகிலும் கரையை அரித்துக்கொண்டு வந்தது. அரசமரம் இருந்த இடமும் அரிப்பெடுத்துக் கரைந்துவிட்டது. மண் கரையக் கரைய அரச மரம் வேரூன்றி நிற்க முடியவில்லை. அப்படியே ஆற்றுக் குள் சாய்ந்தது. வெள்ளம் அரசமரத்தையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது.

“ஆற்றங்கரை வாழ்வு அவ்வளவுதான் !” என்று சொல்லி மற்ற மரங்கள் அரச மரத்திற்காகப் பரிதாபப்பட்டன.

கருத்துரை :- ஆற்றங்கரை மரம் நிலைத்து நிற்க முடியாது. அதுபோல அரசியல் செல்வாக்கும் நிலையானதல்ல.